முகப்பு
Home
புகழேந்தி பற்றி
About Pugazhenthi
ஓவியங்கள்
Art Gallery
எழுத்துக்கள்
Articles/Interviews
மின்னஞ்சல் மற்றும் தொடர்புத் தகவல்
Email/Contact Info
தலையை, தசையை, கண்ணை, கைகளை ஓவியமாக்கலாம். ஆற்றல் ஒன்றும் தேவையில்லை; பயிற்சியே போதும். ஆனால், பெருமூச்சை ஓவியமாக்குவது எப்படி? அதுதான் புகழேந்தியின் கலை.

பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சையல்ல - புயலை அவர் ஓவியங்களிலிருந்து அறுவடை செய்கிறான். துன்பப்படுகிறவர்கள், தாழ்த்தப்படுகிறவர்கள், ஒடுக்கப்படுகிறவர்கள், மிதிக்கப்படுகிறவர்கள், கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவரது ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன.

கண்ணைக் கிழிக்காத, கருத்தில் உறைக்கின்ற வண்ணங்களாய் - மாந்தனின் இயல்பான விடுதலை உணர்வால் புடைத்து எழும் நரம்பாய் - தசையாய் - நாளமாய் - வெறும் அப்பல்களாய் இல்லாத வலிமைமிக்க வீச்சுக்களாய் - அவர் ஓவியங்கள்.

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
All artwork in this website are © K Pugazhenthi 2002. Any unauthorized use, personal or commercial, would be illegal. Thanks for complying.